

தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் கூட்டணியான நடிகர் ஜீவா, இயக்குநர் எம். ராஜேஷ், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் 'ஜாலியா இருந்த ஒருத்தன்'.
இப்படத்தில் இவானா, பரிதாபங்கள் சுதாகர், எம்.எஸ்.பாஸ்கர், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் சார்பில் டத்தோ அப்துல் மாலிக் தயாரித்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான ஜியோ ஜியாலே கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான காதல் கசக்குது இன்று வெளியாகி உள்ளது. ஆதேஷ் கிருஷ்ணா பாடலை எழுதியுள்ளார்.
படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.