

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'மிஸ்டர் பாரத்'.
யூடியூபில் பிரபலமான நிரஞ்சன் இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 'ஃபைனலி' யூடியூப் சேனல் புகழ் பாரத் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், சுந்தர்ராஜன், லிங்கா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு பிரணவ் முனிராஜ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் திரையரங்குகளில் இன்று (அக்.1) படம் வெளியாக இருந்தநிலையில், வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக ஜூலை மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
அப்போது விஜய்யின் ஜன நாயகன் வெளியீட்டால், அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பிற்கு பின்னர் படக்குழு வேறு எந்த அப்டேட்டையும் வழங்கவில்லை.
இந்நிலையில் பத்தா , ஏழு கடல் ஏழு மலை , சிக்மா மற்றும் அன்பில் அவன் ஆகிய நான்கு படங்கள் இந்த வாரம் வெளியாகின்றன. இன்று ஏழு மலை ஏழு கடல், பத்தா வெளியானது. இந்நிலையில் படத்தின் வெளியீடு மீண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
'மிஸ்டர் பாரத்' திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.