லோகேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் பாரத்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

திரையரங்குகளில் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக உள்ளது.
லோகேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் பாரத்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Published on

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் 'மிஸ்டர் பாரத்'.

யூடியூபில் பிரபலமான நிரஞ்சன் இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘ஃபைனலி’ யூடியூப் சேனல் புகழ் பாரத் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், சுந்தர்ராஜன், லிங்கா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு பிரணவ் முனிராஜ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

1986 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், சத்யராஜ் நடிப்பில் 'மிஸ்டர் பாரத்' என்ற படம் ஏற்கனவே வெளியானது. இப்படத்தின் தலைப்பை ரஜினிகாந்தின் உதவியின் மூல ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து லோகேஷ் பெற்றுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com