மீண்டும் இணைந்த இருமுகன் கூட்டணி - ‘சியான் 63’ தலைப்பு வெளியீடு!

படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளது.
மீண்டும் இணைந்த இருமுகன் கூட்டணி - ‘சியான் 63’ தலைப்பு வெளியீடு!
Published on

‘இருமுகன்’ இயக்குநர் ஆனந்த் சங்கருடன், நடிகர் விக்ரம் மீண்டும் இணைந்துள்ள படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இது விக்ரமின் 63வது படமாகும்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

விக்ரமுடன் இணைந்து இப்படத்தில் ரியா சுபு, ஊர்வசி, விடிவி கணேஷ், மேகா ராஜன், சுபாஷ் செல்வம், சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வீர தீர சூரன்: பாகம் 2

விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியானப் படம் வீர தீர சூரன்: பாகம் 2. இப்படத்தை ரியா சுபு தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2016-ல் வெளியான இருமுகன் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று, பாக்ஸ் ஆபிஸ் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com