‘இருமுகன்’ இயக்குநருடன் மீண்டும் இணையும் விக்ரம் - ‘சீயான் 63’ அறிவிப்பு!

நடிகர் விக்ரமின் 63வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
‘இருமுகன்’ இயக்குநருடன் மீண்டும் இணையும் விக்ரம் - ‘சீயான் 63’ அறிவிப்பு!
Published on

நடிகர் விக்ரம் நடிக்கும் 63வது திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோவை அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்தாண்டு வெளியான வீர தீர சூரன் படத்திற்கு பிறகு, விக்ரமின் அடுத்தப் படம் தொடர்பான அப்டேட்டிற்கு ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் இருமுகன் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் அறிவிப்புடன் ஒரு சிறப்பு டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விக்ரம் ஒரு சமையல்காரராக மர்மமான பின்னணியைக் கொண்ட கதாபாத்திரத்தில் நடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக, இயக்குநர் போடி கே. ராஜ்குமார் இயக்கத்தில் 'சீயான் 63' உருவாக இருப்பதாகச் செய்திகள் வந்தன. ஆனால், தற்போது ஆனந்த் சங்கர் இயக்கும் படமே விக்ரமின் 63-வது படமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com