50 நாட்களைக் கடந்து வெள்ளித்திரையில் 'தி கோட்'

இப்படம் கடந்த மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. இம்மாதம் 3-ந்தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
50 நாட்களைக் கடந்து வெள்ளித்திரையில் 'தி கோட்'
Published on

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், மோகன், பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'தி கோட்'. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்து இருந்தார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை தமிழகத்தில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிட்டார்.

விஜயின் அரசியல் குறித்த அறிவிப்பு பிறகு வெளியானதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் இப்படம் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது.

இப்படம் கடந்த மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. தொடர்ந்து இம்மாதம் 3-ந்தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த நிலையில், 'தி கோட்' படம் வெளியாகி 50 நாள் ஆவதை குறிக்கும் விதமாக வெளியாகி உள்ள போஸ்டரை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com