சர்வதேச எம்மி விருது மேடையில் முதல் இந்திய நடிகர்... வரலாறு படைக்கும் விஜய் சேதுபதி

'மகாராஜா' ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது.
விஜய் சேதுபதி
Published on: 
Summary

எம்மி விருது விழாவில் விருது வழங்கும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை விஜய் சேதுபதி பெறவுள்ளார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தனது திரைப்பயணத்தில் மற்றொரு அரிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

நவம்பர் 23 அன்று நியூயார்க்கில் நடைபெறவுள்ள 54வது சர்வதேச எம்மி விருதுகள் விழாவில் விருது வழங்கும் பிரபலங்களில் ஒருவராக நடிகர் விஜய் சேதுபதியும் பங்கேற்க உள்ளார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

எம்மி விருது விழாவில் விருது வழங்கும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை விஜய் சேதுபதி பெறவுள்ளார்.

முதல் இந்திய நடிகர்

இதற்கு முன்னர், 2016ல் பிரைம்டைம் எம்மி விருது வழங்கும் மேடையில் நடிகை பிரியங்கா சோப்ரா விருது வழங்கியுள்ளார்

இருப்பினும், சர்வதேச எம்மி விருது வழங்கும் மேடையில் இந்த கௌரவத்தைப் பெறும் முதல் இந்திய நடிகர் விஜய் சேதுபதி ஆவார்.

சர்வதேச எம்மி விருதுகள் அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்பட்டு, ஒளிபரப்பப்படும் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்கள் மற்றும் கலைஞர்களை கவுரவிப்பதற்காக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மகாராஜா ரீமேக்

இதற்கிடையில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த பிளாக்பஸ்டர் திரில்லர் படமான 'மகாராஜா' ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது.

ஒரு முன்னணி ஹாலிவுட் ஏஜென்சி ரீமேக் உரிமைகளுக்காக தங்களை அணுகியதாக தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட இப்படம் சீனாவில் பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூ. 91.65 கோடி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த ரீமேக்கில் ஹாலிவுட் நட்சத்திரம் மேத்யூ மெக்கனாஹி நடிக்கக்கூடும் என்று சமூக ஊடகங்களில் யூகங்கள் எழுந்து வருகிறது.

விஜய் சேதுபதி படவரிசை

மறுபுறம் பாலாஜி தரனீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த பத்தா திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்ப்பை பெற்றது.

அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்த ட்ரெயின் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது. தெலுங்கு இயக்குநர் பூரி ஜகன்நாத் இயக்கத்தில் அவர் நடித்த ஸ்லம்டாக் படமும் விரைவில் வெளியாகிறது.

அடுத்ததாக மணிரத்னம் இயக்கும் 'இஞ்சி வெள்ளம்' என்ற காதல் படத்தில் விஜய் சேதுபதி - சாய் பல்லவி ஜோடி சேர்கின்றனர்.

விஜய் சேதுபதி தற்போது பிரபல இயக்குனர் நாடகத்தில் சாய் பல்லவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மணிகண்டன் இயக்கத்தில் காட்டான் என்ற இணைய தொடரிலும் விஜய் சேதுபதி நடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.

X