பாடலாசிரியர் விஜய் சேதுபதி வரிகளில்... இருவர் ஆல்பம் வெளியீடு!

இந்த ஆல்பம் மூலம் நிவாஸ் கே பிரசன்னா நடிகராக அறிமுகமாகிறார்.
பாடலாசிரியர் விஜய் சேதுபதி வரிகளில்... இருவர் ஆல்பம் வெளியீடு!
Published on: 

நிவாஸ் கே.பிரசன்னா, அதிதி சங்கர் இணைந்து நடித்துள்ள ‘இருவர்’ ஆல்பம் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது.

விஜய் சேதுபதி இப்பாடலுக்கு வரிகளை கொடுத்துள்ளார். அதற்கு சூரஜ் சந்தோஷ், அதிதி ஷங்கர் குரல் கொடுத்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இந்த ஆல்பத்திற்கு இசையும் அமைத்துள்ளார்.

ஜடா பட இயக்குநர் குமரன் இயக்கியுள்ள இந்த ஆல்பத்தை ஸ்டோன் ப்ரூக் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. விரைவில் வீடியோ பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X