நன்றி தலைவா.. விஜய்யின் ' தி கோட்' படத்தை பாராட்டிய ரஜினி.. வெங்கட் பிரபு நெகிழ்ச்சி!

கடந்த மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி ரூ.455 கோடி வரை வசூலை எடுத்தது.ரஜினிகாந்த் தன்னை தொடர்புகொண்டு பாராட்டியதாகப் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நன்றி தலைவா.. விஜய்யின் '  தி கோட்' படத்தை பாராட்டிய ரஜினி.. வெங்கட் பிரபு நெகிழ்ச்சி!
Published on

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" (தி கோட்). இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், சினேகா,யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்தனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படம் கடந்த மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில்  வெளியாகி ரூ.455 கோடி வரை வசூலை எடுத்தது. தொடர்ந்து கடந்த 3 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு நடிகர் ரஜினிகாந்த் தன்னை தொடர்புகொண்டு பாராட்டியதாகப் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், " போன் செய்து கோட் படத்தை அன்புடன் பாராட்டியதற்காக நன்றி தலைவா. முழு மனதார பாராட்டியதற்காக மீண்டும் நன்றி" எனக் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ரஜினியின் வேட்டையன் பட ரிலீஸான போது விஜய்யும் வெங்கட் பிரபுவும் திரையரங்கில் பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com