தளபதி - 69 : விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்த எச்.வினோத்

இந்நிலையில் தளபதி- 69 படத்தில் விஜய் யை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் எச்.வினோத்துக்கு கிடைத்து உள்ளது.GOAT படப்பிடிப்பு முடிந்ததும் தளபதி 69 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி - 69 : விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்த எச்.வினோத்
Published on

பிரபல நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.விரைவில் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ளது. அதன்பின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்குகிறது.

வருகிற 14 - ந்தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடல் வெளியாகுகிறது.விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் விரைவில் வெளியாக உள்ள GOAT படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே உருவாகி உள்ளது.

கடந்த பல மாதங்களாகவே விஜய் கண்டிப்பாக அரசியலில் என்ட்ரி கொடுப்பார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. மேலும் நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக்கழகம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.

வருகிற 2026- ல் சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிட உள்ளார் .தளபதி -69' படத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தளபதி - 69 படத்தை இயக்க போகும் இயக்குனர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்து வருகிறது.இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ், ஆர்.ஜெ. பாலாஜி ,வெற்றிமாறன், எச்.வினோத் உள்ளிட்டோரில் ஒருவர் தான் விஜய் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தளபதி- 69 படத்தில் விஜய் யை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் எச்.வினோத்துக்கு கிடைத்து உள்ளது. அவரின் ஸ்கிரிப்ட்டை விஜய் அங்கீகரித்து உள்ளார்

GOAT படப்பிடிப்பு முடிந்ததும் தளபதி 69 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com