கங்குவா படத்தின் 'தலைவனே' பாடல் வெளியானது

கங்குவா படத்தின் இரண்டாம் பாடலான யோலோ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது.கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
கங்குவா படத்தின் 'தலைவனே' பாடல் வெளியானது
Published on

சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தில் சூர்யா இரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கங்குவா படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. திரைப்படத்தின் இரண்டாம் பாடலான யோலோ பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இந்நிலையில் மதன் கார்க்கி எழுதியுள்ள கங்குவா படத்தின் 'தலைவனே' பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com