

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் வெளியாவதற்கு முன்பே பீஸ்ட் படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. குறிப்பாக அரபிக் குத்து பாடல் அனைவரையும் தாளம் போட வைத்து உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலானது.
பீஸ்ட் - அரபிக் குத்து
அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் ஜோனிட்டா காந்தி இருவரும் இணைந்து பாடியிருந்த அரபிக் குத்து பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் 500 மில்லியன் பார்வையாளர்களைக்கு மேல் கடந்துள்ளது.
பீஸ்ட் - அரபிக் குத்து
இந்நிலையில் இப்பாடல் வெளியாகி ஓராண்டு ஆனதை நினைவு கூர்ந்து படக்குழு வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதுதொடர்பாக ஹாஷ்டாக் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.