வைரலாகும் தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார்.தளபதி 66 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.
தளபதி 66
தளபதி 66
Published on

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். தளபதி 66 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.

இப்படம் குடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'வாரிசுடு' என்றும் தமிழில் 'வாரிசு' என்றும் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. சில தினங்களுக்கு முன்பு, தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21-ஆம் தேதி மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

தளபதி 66 - வாரிசு
தளபதி 66 - வாரிசு

தளபதி 66 - வாரிசு


இந்நிலையில் அறிவித்தபடி தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் பெயரையும் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்திற்கு 'வாரிசு' என்று பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com