search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தளபதி 66 படத்தின் அப்டேட் கொடுத்த படக்குழு.. கொண்டாடும் ரசிகர்கள்
    X

    விஜய் 

    தளபதி 66 படத்தின் அப்டேட் கொடுத்த படக்குழு.. கொண்டாடும் ரசிகர்கள்

    • பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார்.

    பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். தளபதி 66 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

    இப்படம் குடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்திற்கு தெலுங்கில் 'வாரிசுடு' என்றும் தமிழில் 'வாரிசு' என்றும் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    தளபதி 66

    இந்நிலையில் தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜூன் 21-ஆம் தேதி மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


    Next Story
    ×