நானே எதிர்த்து நின்றாலும் என் கனவது வீழாது.. ட்ரெண்டாகும் கவின் பட வீடியோ

இயக்குனர் எலன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஸ்டார்’.இந்த படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்கிறார்.
நானே எதிர்த்து நின்றாலும் என் கனவது வீழாது.. ட்ரெண்டாகும் கவின் பட வீடியோ
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் யுவன் சங்கர் ராஜாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. பி.ஜி.எம். கிங் என்று ரசிகர்களால் போற்றப்படும் யுவன் சங்கர் ராஜா இசையை கடந்து திரையுலகில் பல்வேறு பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.

அந்த வகையில், யுவன் சங்கர் ராஜா ஒய்.எஸ்.ஆர். ஃபிலிம்ஸ் என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படத்தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் தயாரித்து வெளியான முதல் படம் 'பியார் பிரேமா காதல்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் எலன் இயக்கி இருந்தார்.

'பியார் பிரேமா காதல்' படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் எலன் உடன் இணைந்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. கவின் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு 'ஸ்டார்' என்று படக்குழு தலைப்பு வைத்துள்ளது. இப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com