மொட்ட பாஸாக மாறிய மலேசியா பிரதமர்.. வீடியோ வைரல்

ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.நடிகர் ரஜினிகாந்த், மலேசியா சென்றுள்ளார்.
மொட்ட பாஸாக மாறிய மலேசியா பிரதமர்.. வீடியோ வைரல்
Published on

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்து. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி, நெல்சன், அனிருத் மற்றும் ஜெயிலர் படக்குழுவினருக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசுகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

அன்வர் இப்ராஹிம்- ரஜினி

இந்நிலையில், மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினி பிரதமர் அன்வர் இப்ராஹிம்மை சந்தார். அப்போது பிரதமர் அன்வர் இப்ராஹிம், நடிகர் ரஜினி நடித்த 'சிவாஜி' படத்தின் 'மொட்ட பாஸ்' மேனரிசத்தை செய்து காண்பித்து அவரை வரவேற்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவர் "ஆசிய மற்றும் சர்வதேச கலையுலகில் புகழ் பெற்ற ரஜினிகாந்தை சந்தித்தேன்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com