திருவண்ணாமலை சென்ற ரஜினியின் மகள்.. ஏன் தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.இவர் நேற்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
திருவண்ணாமலை சென்ற ரஜினியின் மகள்.. ஏன் தெரியுமா?
Published on

இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்', இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

லால் சலாம்- வேட்டையன்

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளத்தின் மூலமாக தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல், ரசிகர்கள் பலர் ரஜினிகாந்த் கோவிலுக்கு பாலாபிஷேகம் செய்து பொது மக்களுக்கு உணவு வழங்கினார்கள்.

திருவண்ணாமலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

இந்நிலையில், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வலம் வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com