விஜய் படத்திற்காக மீண்டும் இணையும் பிரபல இயக்குனர்கள்

இயக்குனர் வம்சி இயக்கி வரும் வாரிசு படத்தில் விஜய் நடித்து வருகிறார்.இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
விஜய்
விஜய்
Published on

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ரத்னகுமார் - லோகேஷ் கனகராஜ்
ரத்னகுமார் - லோகேஷ் கனகராஜ்

ரத்னகுமார் - லோகேஷ் கனகராஜ்

விஜய்யின் அடுத்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பின் போது லோகேஷ் கனகராஜ் ஒரு வரிக்கதையை விஜய்யிடம் கூறியதாகவும், தற்போது அதை முழுக்கதையாக உருவாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரத்னகுமார் - லோகேஷ் கனகராஜ்
ரத்னகுமார் - லோகேஷ் கனகராஜ்

ரத்னகுமார் - லோகேஷ் கனகராஜ்

இந்நிலையில் 'மாஸ்டர்', 'விக்ரம்' ஆகிய படங்களில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் திரைக்கதை எழுத்தாளராக இணைந்து பணியாற்றிய இயக்குனர் ரத்ன குமார் 'தளபதி 67' படத்திலும் திரைக்கதை எழுத்தாளராகப் பணியாற்ற உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

ரத்னகுமார் - லோகேஷ் கனகராஜ்
ரத்னகுமார் - லோகேஷ் கனகராஜ்

ரத்னகுமார் - லோகேஷ் கனகராஜ்

இயக்குனர் ரத்னகுமார் 'மேயாத மான்', 'ஆடை' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com