'நந்தன்' படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

நந்தன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.ஓடிடியில் வெளியான பிறகு நந்தன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
'நந்தன்' படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
Published on

'கத்துக்குட்டி', 'உடன் பிறப்பே' போன்ற படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் நந்தன் என்ற படத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ளார்.

உண்மை கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் இதுவரை நாம் பார்த்திராத கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்

இப்படம் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனையடுத்து இத்திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ஓடிடியில் வெளியான பிறகு நந்தன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருமாவளவன், அன்புமணி ராமதாஸ், அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இத்திரைப்படத்தை பாராட்டி பேசியுள்ளனர்.

இந்நிலையில் நந்தன் படத்தை பார்த்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளதாக நடிகர் சசிகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "நந்தனது தைரியத்தையும் உழைப்பையும் பாராட்டியதோடு, படக்குழுவினரை தொலைபேசியில் அழைத்து அகம் திறந்து வாழ்த்திய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி" என்று சசிகுமார் பதிவிட்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com