சிவகார்த்திகேயனின் 'SK27' - புதிய அப்டேட் இன்று மாலை வெளியாகிறது!

ஒரு பக்கா மாஸ் கமர்ஷியல் ஆக்ஷன்-டிராமாவாக உருவாகி வருவது 'SK27'.
SK27
Published on: 
Summary

அமரன் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 27-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரெட்-தீம் போஸ்டர்

பழைய கார் ரேடியோ அமைப்பைக் கொண்ட இந்த ரெட்-தீம் போஸ்டரில், "TUNE IN AT 5.27 TODAY" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5.27 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்தின் முக்கிய விபரங்கள்

தேசிய விருது பெற்ற பிளாக்பஸ்டர் திரைப்படமான 'பார்க்கிங்'திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார். சிவகார்த்திகேயனுடன் இவர் இணையும் முதல் படம் இதுவாகும்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை காயடு லோஹர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தொழில்நுட்பக் குழு

இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, கலைவாணன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

அண்மையில் நடைபெற்ற ரசிகர்களின் சந்திப்பில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், "இனிமேல் நான் முழு நீள கமர்ஷியல் மற்றும் மாஸ் என்டர்டெய்னர் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தப் போகிறேன்" என்று உறுதியளித்திருந்தார்.

அதற்கேற்ப, இந்தப் படம் ஒரு பக்கா மாஸ் கமர்ஷியல் ஆக்ஷன்-டிராமாவாக உருவாகி வருவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com