'The Universe Tour' கச்சேரியில் ஜெர்மனியை அதிரவைத்த சிம்பு - யுவன் - ஆண்ட்ரியா..

பல வருடங்களுக்குப் பிறகு சிம்பு, யுவன், ஆண்ட்ரியா ஆகிய மூவரையும் ஒரே மேடையில் இருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Simbu - Andrea - Yuvan
Published on: 
Summary

யுவனின் ‘தி யுனிவர்ஸ் டூர்’ (The Universe Tour) கச்சேரி ஜெர்மனியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிம்பு மேடையேறினார்.

அப்போது அவரோடு மேடையில் இருந்த நடிகை ஆண்ட்ரியா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய மூவரும் இணைந்து, சிம்புவின் ‘வானம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான ‘No Money No Honey' பாடலுக்கு செம எனர்ஜியுடன் நடனமாடி, மேடையையே அதிரவைத்தனர்.

ஜெர்மனியில் நடைபெற்ற யுவன் சங்கர் ராஜாவின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில், நடிகர் சிம்பு மற்றும் நடிகை ஆண்ட்ரியா இணைந்து ஆடிய மரண மாஸ் டான்ஸ் வீடியோ தற்போது ஒட்டுமொத்த இணையத்தையும் உலுக்கி வருகிறது.

ஆண்ட்ரியா பதிவு - அரசன் ரீ-யூனியன்

சமீபத்தில் ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்புவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘அரசன் ரீ-யூனியன் இன் ஜெர்மனி’ என்று பதிவிட்டிருந்தார்.

அது வெறும் தற்செயலான சந்திப்பு அல்ல, ஜெர்மனியில் நடைபெற்ற யுவனின் பிரம்மாண்ட லைவ் கான்சர்ட்டுக்காக அவர்கள் அனைவரும் ஒன்று கூடியுள்ளனர் என்பது தற்போது வெளியாகியுள்ள வீடியோக்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தீயாய் பரவும் 'வானம்' பட பாடல் வைப்!

மேடையில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஆண்ட்ரியா மைக் பிடித்து பாட, திடீரென ‘ஆத்மன்’ சிம்பு மாஸாக என்ட்ரி கொடுத்து மேடையில் நடனமாடத் தொடங்கினார். இவர்கள் மூவரும் இணைந்து ‘No Money No Honey’ பாடலுக்கு போட்ட ஆட்டம், அங்கிருந்த ஆயிரக்கணக்கான தமிழ் ரசிகர்களை உச்சகட்ட அதிர்வுக்கு உள்ளாக்கியது.

இந்த அன்மேட்ச்டு ஆரா மற்றும் எனர்ஜியைக் கொண்ட ரீல்ஸ் வீடியோக்கள், பல ரசிகர்களின் பக்கங்களில் வெளியாகி, தற்போது மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களைக் கடந்து ட்ரெண்டாகி வருகிறது.

பல வருடங்களுக்குப் பிறகு சிம்பு, யுவன், ஆண்ட்ரியா ஆகிய மூவரையும் ஒரே ஃபிரேமில், அதுவும் இவ்வளவு எனர்ஜியோடு பார்த்த ரசிகர்கள், "இது வெறும் வைப் இல்ல, பியூர் ஃபயர்!" என்று கமெண்ட்களை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com