தளபதி 69 படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்

தளபதி 69 என்ற தலைப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது.தளபதி 69 படத்தை இயக்குநர் எச். வினோத் இயக்குகிறார்.
தளபதி 69 படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியான 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரேவற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் தனது அரசியல் கட்சியின் முதல் மாநில மாநாடு, கட்சி சார்ந்த கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.

இதனிடையே நடிகர் விஜய், இயக்குநர் எச். வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பது குறித்த தகவல் வெளியானது. மேலும், இந்தப் படத்தின் பூஜை தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. தற்காலிகமாக 'தளபதி 69' என்ற தலைப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில், 'தளபதி 69' படத்தில் அழகிய கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழு தன்னை தொடர்பு கொண்டதாக கன்னட சூப்பர்ஸ்டார் நடிகரான சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய சிவராஜ்குமார் இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார்.

இதுபற்றி பேசிய நடிகர் சிவராஜ்குமார், "விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் நல்ல கதாபாத்தித்தில் நடிக்க கேட்டிருக்கிறார்கள். எனது தேதிகள் சார்ந்த விஷயங்களால் இது எப்படி முடியும் என்பது தெரியவில்லை. ஆனால், நடிகர் விஜய் நல்ல மனிதர், சிறப்பான நடிகர். சினிமா மற்றும் அரசியல் சார்ந்த அவரின் முடிவு அற்புதமானது. இவை இரண்டையும் நான் மதிக்கிறேன்," என்று தெரிவித்தார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com