கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் சீமான் - வீடியோ வெளியிட்ட சேயோன் படக்குழு!

படம் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் சீமான்... வீடியோ வெளியிட்ட சேயோன் படக்குழு!
Published on

‘தாய் கிழவி’ பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுத்து மற்றும் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் சேயோன்.

பாக்யஸ்ரீ போர்ஸ், பால சரவணன், அருள்தாஸ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆர். மகேந்திரனுடன் இணைந்து நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அமரனைத் தொடர்ந்து கமல்ஹாசனின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 2வது படம் இதுவாகும்.

இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் சீமான் இணைந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com