சரோஜா தேவி இப்போது நம்முடன் இல்லை - ரஜினி இரங்கல்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்.தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
சரோஜா தேவி இப்போது நம்முடன் இல்லை - ரஜினி இரங்கல்
Published on

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்.உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார்.

சரோஜா தேவி மறைவால் திரையுலகினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் அவரது இரங்கலை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அதில் அவர் "பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த மாபெரும் நடிகை சரோஜாதேவி இப்போது நம்முடன் இல்லை.

அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்." என கூறியுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com