அடுத்த வாரம் ரிலீஸ்: ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த சர்தார் 2 டிரெய்லர் வெளியீடு

சர்தார் 2 திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
Sardar 2 Trailer Poster
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்தார் 2’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது.

இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது.

‘சர்தார் 2’ திரைப்படத்தில் கார்த்தி அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

சாம் சி.எஸ். 100:

இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்கும் 100-வது திரைப்படம் ‘சர்தார் 2’ என்பதால், படத்தின் இசை மீதும் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ‘சர்தார் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், அறிமுக வீடியோ மற்றும் டீசர் வெளியாகி வைரலானது.

இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் முதல் பாடலாக ‘மயில்வீரா’ சமீபத்தில் வெளியானது. தமிழ் கடவுளான முருகனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல், பக்தி கலந்த இசையுடன் அமைந்துள்ளது.

ரிலீஸ் அப்டேட்:

முதல் அறிவிப்பு வெளியானதில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து உருவாகி இருக்கும் ‘சர்தார் 2’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அடுத்த வாரம் திரைப்படம் வெளியாவதை ஒட்டி நடிகர் கார்த்தியின் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ‘சர்தார் 2’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com