ராவண மவன்டா..! இன்று இரவு வெளியாகும் ஜனநாயகனின் 4வது பாடல்

ஜன நாயகன் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகிறது.
ராவண மவன்டா..! இன்று இரவு வெளியாகும் ஜனநாயகனின் 4வது பாடல்
Published on

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'ஜன நாயகன்' தான் விஜயின் கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.

ஜன நாயகன் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில், ரசிகர்களுக்கு அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு உற்சாகப்படுத்தி வருகிறது.

அதன்படி, ஜன நாயகன் படத்தின் டிரெய்லர் ஜனவரி 3 ஆம் தேதி (நாளை) மாலை 6.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்நிலையில், 'ஜனநாயகன்' படத்தின் 'ராவண மவன்டா' பாடல் இன்று இரவு 7.50 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஏற்கனவே, ஜன நாயகன் படத்தில் இருந்து தளபதி கசசேரி, ஒரே பேரே வரலாறு, செல்ல மகளே ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இன்று 4வது பாடல் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com