லண்டனில் மிரட்டலான விளம்பரம்: பாரம்பரிய உடைகளை தவிர்த்து கேஷுவல் உடைகளில் தோன்றிய 'ராமாயணா' படக்குழு!

படத்தில் இடம்பெறும் வில்-அம்பு விடும் பாணியில் போஸ் கொடுத்து புகைப்படக்காரர்களை உற்சாகப்படுத்தினர்.
Ramayana film team
Published on: 
Summary

இதுவரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பாரம்பரிய மற்றும் பாரம்பரியம் சார்ந்த ஆடைகளில் வலம் வந்த முக்கிய நட்சத்திரங்கள், லண்டன் நிகழ்ச்சியில் முற்றிலும் மாறுபட்ட கேஷுவல் உடைகளில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினர்.

இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான பான்-இந்தியா திரைப்படம் 'ராமாயணா' ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்'. இப்படம் வருகிற 5-ஆம் தேதி தீபாவளி விருந்தாக உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

பாரம்பரியத்தை தவிர்த்து கேஷுவல் லுக்

இதுவரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பாரம்பரிய மற்றும் பாரம்பரியம் சார்ந்த ஆடைகளில் வலம் வந்த முக்கிய நட்சத்திரங்கள், லண்டன் நிகழ்ச்சியில் முற்றிலும் மாறுபட்ட கேஷுவல் உடைகளில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினர். இப்படத்தின் நாயகன் ரன்பீர் கபூர், சீதையாக நடித்துள்ள சாய் பல்லவி மற்றும் ராவணமாக நடித்துள்ள யஷ் ஆகியோர் எளிய மற்றும் ஸ்டைலான கேஷுவல் உடைகளில் ரெட் கார்பெட் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

லண்டன் காரிந்தியா ஓட்டலில் நடைபெற்ற இந்த சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் புகைப்பட அமர்வில், படத்தின் இயக்குநருடன் தயாரிப்பாளர் நமீத் மல்ஹோத்ராவும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வின்போது நடிகர்கள் அனைவரும் மிகவும் கலகலப்பாக செல்ஃபி எடுத்துக்கொண்டதுடன், படத்தில் இடம்பெறும் வில்-அம்பு விடும் பாணியில் போஸ் கொடுத்து புகைப்படக்காரர்களை உற்சாகப்படுத்தினர்.

மிகப்பெரிய பொருட்செலவில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் நாளை திரைக்கு வருகிறது. சர்வதேச அளவில் இப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் முன்பதிவு ஏற்கனவே கோடிக்கணக்கில் வசூலித்து சாதனை படைத்து வருவதால், பாக்ஸ் ஆபிஸில் பல புதிய சாதனைகளை இப்படம் முறியடிக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

X