

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ராமாயணம்: பார்ட் 1' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனையை நோக்கி முன்னேறி வருகிறது. திரையிடப்பட்ட மூன்றாவது நாளில் இப்படம் மாபெரும் வசூல் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
படத்தின் மூன்றாம் நாள் வசூலில் சுமார் 45 சதவீதத்திற்கும் அதிகமான பாய்ச்சல் காணப்பட்டது. இந்தியாவில் மட்டும் இப்படம் மூன்றாம் நாளில் தோராயமாக ரூ. 69.80 கோடி நிகர வசூலை ஈட்டியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் படத்தின் மொத்த நிகர வசூல் ரூ. 182.70 கோடியைக் கடந்துள்ளது. குறிப்பாக, இந்தி பதிப்பு அதிகபட்சமாக ரூ. 53 கோடி வரை வசூலித்து திரையரங்குகளில் முன்னணியில் உள்ளது.
இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச சந்தைகளிலும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. வெளிநாடுகளில் மட்டும் மூன்றாம் நாளில் சுமார் ரூ.60 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வசூல்களை சேர்த்து இப்படத்தின் உலகளாவிய மொத்த வசூல் தற்போது ரூ. 375.50 கோடியை எட்டி, ரூ.376 கோடியை நெருங்கியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்திற்கு வார இறுதி நாட்களில் குடும்பங்களின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. விடுமுறை நாட்களில் படத்தின் வசூல் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், வார நாட்களில் படத்தின் உண்மையான வணிக நிலவரம் என்னவென்பதை பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.