`தாதா' வேடத்தில் நடிக்கும் - ரஜினிகாந்த் 'புது அப்டேட்'

ரஜினி- 171 புதிய படம் குறித்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.இந்தப் படத்தில் ரஜினிகாந்த் தங்கக் கடத்தல் மாபியா தாதாவாக நடிக்கிறார். இணைய தளத்தில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்துகள் பதிவு செய்து வருகின்றனர்.
`தாதா' வேடத்தில் நடிக்கும் - ரஜினிகாந்த் 'புது அப்டேட்'
Published on: 

தமிழ் திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

கடந்த சில வருடங்களாக 'ஹிட்ஸ்' குறைந்து உள்ளது.சமீபத்தில் வெளியான ஜெயிலர், லால்சலாம் உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த அளவு அமைய வில்லை. தற்போது ரஜினிகாந்த் வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரஜினி- 171 புதிய படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விரைவில் இயக்க உள்ளார். வருகிற ஏப்ரல் 22- ந்தேதி இந்த படத்திற்கான "டைட்டில்" அறிவிக்கப்பட உள்ளது. சில தினங்களுக்கு. முன் வெளியான ரஜினியின் 'ப்ரீ-லுக்' ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் ரஜினி- 171 புதிய படம் குறித்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.இந்தப் படத்தில் ரஜினிகாந்த் தங்கக் கடத்தல் மாபியா தாதாவாக நடிக்கிறார்.

40 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தங்கக் கடத்தல் அதிகமாக இருந்தது. சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் இருந்து ரகசியமாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்கம் இந்தியாவுக்கு புழக்கத்திற்கு வந்தது.

அந்தநேரத்தில் விமான நிலைய பாதுகாப்பு , சோதனை முறையில் நவீன வசதிகள் இல்லாததால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் தங்கம் கடத்தல் அதிகரித்தது. பஸ், ரெயில்கள் வழியாகவும் கடத்தல் நடந்தது.

இந்த சம்பவத்தை மையமாக கொண்டு இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் ரஜினி தங்க கடத்தல் 'தாதா' வேடத்தில் நடிக்க உள்ளார். இதற்கான 'ஸ்கிரிப்' தயார் செய்யும் பணியில் இயக்குனர் லோகேஷ்கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.

இந்த படத்தில் விரைவில் ரஜினி உள்ளதை யொட்டி தற்போது இணைய தளத்தில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்துகள் பதிவு செய்து வருகின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com