அடுத்த ஆண்டு முதல் இமயமலை செல்வேன்- ரஜினிகாந்த்

'தர்மன்' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது இப்படத்தின் 2-ம் கட்டப் படப்பிடிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன.
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
Published on: 
Summary

நடிகர் ரஜினிகாந்த், 'தர்மன்' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்ததாகவும், அடுத்த ஆண்டு வழக்கம்போல் இமயமலை பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள், அவரது அடுத்தடுத்த திரைப்படப் பணிகள் மற்றும் இமயமலைப் பயணம் குறித்துக் கேள்விகளை எழுப்பினர்.

அதற்குப் புன்னகையுடன் பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், 'தர்மன்' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது இப்படத்தின் 2-ம் கட்டப் படப்பிடிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. மேலும், அடுத்த ஆண்டு முதல் வழக்கம் போல் இமயமலைக்குச் செல்வேன் என்று தெரிவித்தார்.

X