மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்பராஜ் - விரைவில் அறிவிப்பு?

நடிகர் சூர்யாவை வைத்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் புதிய படத்தை இயக்கி வருகிறார்.படப்பிடிப்பு அந்தமானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்பராஜ் - விரைவில் அறிவிப்பு?
Published on

நடிகர் ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்திற்கு பிறகு தற்போது இயக்குனர் லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு 'கூலி எனப்பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் கதை ரஜினிக்கு பிடித்திருந்ததால் 'ரஜினி 172' படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கலாம் என்று கூறப்படுகிறது.

ரஜினி- கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் வெளியான 'பேட்ட' படம் ரஜினி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் 'ரஜினி 172' படம் குறித்த தகவல் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

இதனிடையே, நடிகர் சூர்யாவை வைத்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் புதிய படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு அந்தமானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com