விஜய் சார் முதலமைச்சர் ஆனது மகிழ்ச்சியாக இருக்கிறது: அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடிய பூஜா ஹெக்டே

முன்னாள் நடிகர் விஜய்-யுடன் இணைந்து இரண்டு படங்களில் நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
Pooja Hegde dances to Arabic Kuthu
Published on: 
Summary

இலங்கையில் நடைபெற்ற ஷோரூம் திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகை பூஜா ஹெக்டே, விஜய் தற்போது முதலமைச்சராக இருப்பது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டின் முன்னாள் நட்சத்திர நடிகர் விஜய்-யுடன் இணைந்து இரண்டு படங்களில் நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

தமிழில் கடந்த 2012 இல் வெளியான முகமூடி திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நடிகையாக நடித்திருந்தாலும், அவருக்கு விஜய்யுடன் இணைந்து நடித்த பீஸ்ட் திரைப்படம் பெறும் வெற்றிப்படமாக அமைந்தது.

நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் திரைப்படம், கடந்த 2022ஆம் ஆண்டு ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியாகி இருந்தது.

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனில், நடிகை பூஜா ஹெக்டே அவருடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் உலகளவில் வெளியாகி சுமார் 300 கோடி வரை வசூல் சாதனை படைத்திருந்தது.

இந்த நிலையில் இன்று இலங்கையில் உள்ள கொழும்புவில் ஷோரூம் திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் நடிகை பூஜா ஹெக்டே கலந்து கொண்டார்.

அப்போது அவர் பாரம்பரியமான சேலை அணிந்து வந்து, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து அவரிடம், நடிகர் விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர், விஜய் சார் தமிழக முதலமைச்சரானது தனக்கு மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

மேலும், தான் விஜய்யுடன் இணைந்து இரண்டு அற்புதமான படங்களில் நடித்திருப்பதாகவும், அவர் இப்போது முதலமைச்சராக இருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து நடனமாடும்படி, ரசிகர்கள் பூஜாவிடம் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க, அரபிக்குத்து பாடலுக்கு நடிகை பூஜா ஹெட்க்டே நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

X