சண்டைக்காட்சிகளில் மிரட்டிய நஸ்ரியா: மனம் திறந்து பாராட்டிய ஸ்டண்ட் மாஸ்டர்!

கடந்த 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘சீன்’ திரைப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
  Nazriya
Published on: 

நடிகர் சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியாகி திரையில் ஓடிக்கொண்டிருக்கும் ‘சீன்’ திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை நஸ்ரியாவின் கடுமையான உழைப்பு மற்றும் சண்டைக்காட்சிகளில் அவர் காட்டிய ஈடுபாடு குறித்துப் படத்தின் சண்டைக் பயிற்சி இயக்குநர் சேத்தன் டி'சோசா பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனது இயல்பான மற்றும் கியூட்டான வெளிப்படையான நடிப்பால் 'எக்ஸ்பிரஷன் குயின்' என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நஸ்ரியா, இந்தப் படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தில் முதல்முறையாக முழுமையான சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளார். இயக்குநர் ஜித்து மாதவன் பாணியில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், மாயா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

சண்டை பயிற்சி

படப்பிடிப்பு தளத்தின் சண்டைப்பயிற்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள சண்டைக் பயிற்சி இயக்குநர் சேத்தன் டி'சோசா, நஸ்ரியாவுடன் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். எந்தவிதப் புகார்களும் சொல்லாமல், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் காட்டிய ஆர்வம் தன் வேலையை மிகவும் எளிதாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நஸ்ரியாவின் இந்த மாற்றுப் பயணத்தை 'எக்ஸ்பிரஷன் குயின்' என்பதிலிருந்து 'ஆக்ஷன் குயின்' நோக்கிய ஒரு பயணம் என்றும் அவர் வர்ணித்துள்ளார்.

நஸ்ரியாவின் கலகலப்பான பதில்

சண்டைக் பயிற்சி இயக்குநரின் இந்தப் பாராட்டிற்கு நஸ்ரியா தனது வழக்கமான நகைச்சுவை உணர்வுடன் பதிலளித்துள்ளார். "மாஸ்டரால் உண்மையில் என்னால் இதையெல்லாம் செய்ய முடியும் என்று எப்படி நம்ப முடிகிறது என்று எனக்கு நானே வியக்கிறேன்" என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கலகலப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘சீன்’ திரைப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான முதல் ஐந்து நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் 140 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ள இத்திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

X