மணிகண்டனின் "லவ்வர்"- ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

காதலர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது.லவ்வர், கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
மணிகண்டனின் "லவ்வர்"- ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான குட் நைட் திரைப்படத்தில் மோகன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த மணிகண்டன் பலரையும் கவர்ந்தார்.

இதன் பிறகு, அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள 'லவ்வர்' (lover) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

காதலர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் இளைஞர்கள் மனதில் நின்றது.

இந்நிலையில், லவ்வர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, லவ்வர் திரைப்படம் மார்ச் மாதம் வரும் 27ம் தேதி முதல் டிஸ்னீப் பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com