

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுத்து மற்றும் இயக்கத்தில் சூரி, மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், பால சரவணன், ரவீந்திர விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து செப்.10ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மண்டாடி.
மீனவர்கள் வாழ்க்கை சுற்றில் நடைபெறும் படகுப்போட்டியை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைந்துள்ளது.
ஆர்.எஸ். இன்ஃபோடைன்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவரும் இப்படம் வெளியான ஐந்து நாட்களில் ரூ.65 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.