ஆசீர்வாதம்: ‘மண்டாடி’ பார்த்துவிட்டு சூரியையும், படக்குழுவையும் பாராட்டிய ரஜினிகாந்த்!

படம் செப்.10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஆசீர்வாதம்: ‘மண்டாடி’ பார்த்துவிட்டு சூரியையும், படக்குழுவையும் பாராட்டிய ரஜினிகாந்த்!
Published on

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி மற்றும் நடிகர் சூரி கூட்டணியில் உருவாகி செப்.10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று வரும் படம் மண்டாடி.

படத்தில் சூரியுடன் மஹிமா நம்பியார், நடிகர்கள் சத்யராஜ், சுஹாஷ், ரவீந்திர விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மீனவர்களின் வாழ்க்கை பின்னணியை அடிப்படையாக கொண்டும், அவர்களுக்குள் நடக்கும் படகுப்போட்டியின் அடிப்படையிலும் மண்டாடி திரைக்கதை அமைந்துள்ளது.

படத்தை ரசிகரகள் மட்டுமின்றி, திரைப் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இப்படம் சூரியின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி எனப் புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘சூப்பர் ஸ்டார்’ நடிகர் ரஜினிகாந்த், படத்தை பார்த்துவிட்டு நடிகர் சூரியையும், படக்குழுவினரையும் தொலைபேசியில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

“அவருடைய வார்த்தைகள் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம்” என நடிகர் ரஜினிகாந்தின் பாராட்டு குறித்து சூரி பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com