சீனாவில் 40 ஆயிரம் திரைகளில் வெளியாகும் மகாராஜா - டங்கல் சாதனையை முறியடிக்குமா?

சீனாவில் வெளியான டங்கல் திரைப்படம் 1300 கோடி வசூலை வாரி குவித்தது. சீனாவில் டங்கல் திரைப்படம் நிகழ்த்திய சாதனையை மகாராஜா திரைப்படமும் நிகழ்த்துமா?
சீனாவில் 40 ஆயிரம் திரைகளில் வெளியாகும் மகாராஜா - டங்கல் சாதனையை முறியடிக்குமா?
Published on

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.

இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது. ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற 'மகாராஜா' திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், 'மகாராஜா' திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து சீனாவில் வருகிற 29-ந்தேதி வெளியிட உள்ளனர். அலிபாபா குழுமம் இப்படத்தை வெளியிடவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே சீனாவில் மகாராஜா திரைப்படம் 40,000 திரைகளில் வெளியாகவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் வெளியான டங்கல் திரைப்படம் 1300 கோடி வசூலை வாரி குவித்தது. இதன் மூலம் உலகம் முழுவதும் அத்திரைப்படம் 2000 கோடி வசூலை கடந்தது.

இந்நிலையில் சீனாவில் டங்கல் திரைப்படம் நிகழ்த்திய சாதனையை மகாராஜா திரைப்படமும் நிகழ்த்துமா என்று தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

X

Maalai Malar
www.maalaimalar.com