Lion is Always a Lion - G.O.A.T அதிரடி ஆக்ஷன் டிரைலர் வெளியானது

தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.கோட் திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் எபிக் தொழில் நுட்பத்திலும் வெளியாக இருக்கிறது.
Lion is Always a Lion - G.O.A.T  அதிரடி ஆக்ஷன் டிரைலர் வெளியானது
Published on

நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

கோட் திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் எபிக் தொழில் நுட்பத்திலும் வெளியாக இருக்கிறது.

படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் ஒரு பக்கா ஆக்ஷன் கமெர்ஷியல் திரைப்படமாக அமைந்துள்ளது. டிரைலரில் இடம் பெற்ற வசனங்கள் மிகவும் அசத்தலாக உள்ளது. விஜயின் மகனாக வரும் இளைய விஜய் கதாப்பாத்திரம் மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.

டிரைலரின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com