வெட்டப்பட்ட 21 நிமிட காட்சிகள் இணைப்பு: ஓடிடி-யில் மீண்டும் வெளியாகும் விடுதலை 2

இந்த படம் திரையரங்கில் 2 மணி நேரம் 46 நிமிடங்கள் வெளியானது.மேலும் சில காட்சிகள் சேர்க்கப்பட்டு 3 மணி நேரம் 7 நிமிடங்கள் கொண்ட படமாக வெளியாக உள்ளது.
வெட்டப்பட்ட 21 நிமிட காட்சிகள் இணைப்பு: ஓடிடி-யில் மீண்டும் வெளியாகும் விடுதலை 2
Published on

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்திருந்தனர். இந்தப் படத்தின் முதல் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கினார். இதிலும் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்துள்ளனர். விடுதலை 2 திரைப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பலரும் இப்படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். திரைப்படத்தின் இரண்டு பாகமும் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங்கில் உள்ளது.

இந்நிலையில் இந்த படம் திரையரங்கில் 2 மணி நேரம் 46 நிமிடங்கள் வெளியான நிலையில், மேலும் சில காட்சிகள் சேர்க்கப்பட்டு 3 மணி நேரம் 7 நிமிடங்கள் கொண்ட படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com