கங்குவா படத்தின் முதல் நாள் கலெக்ஷன் அப்டேட்

கங்குவா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கங்குவா படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
கங்குவா படத்தின் முதல் நாள் கலெக்ஷன் அப்டேட்
Published on

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகி நேற்று (நவம்பர் 14) வெளியான படம் கங்குவா. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுக்க 38 மொழிகளில் அதிக திரைகளில் இந்தப் படம் வெளியானது. முன்னதாக கங்குவா படம் குறித்து படக்குழு பல்வேறு தகவல்களை தெரிவித்த நிலையில், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியது.

இந்த நிலையில், கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்தப் படத்தை பார்த்தவர்களில் பலர் படக்குழு எதிர்பார்த்த விமர்சனத்தை கொடுக்கவில்லை. ஒருசிலர் இந்தப் படத்தை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், கங்குவா படத்தின் முதல் நாள் வசூல் விவரங்களை பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "உலகம் முழுக்க பாக்ஸ் ஆஃபிசில் கங்குவா திரைப்படம் ரூ. 58.62 கோடியை வசூல் செய்துள்ளது. அன்பான ரசிகர்கள், சினிமா ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் இதை நடத்தி காட்டியதற்கு நன்றிகள்," என தெரிவித்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com