வீர் பஹாரியாவுக்கு ஜான்வி கொடுத்த டேட்டிங் அட்வைஸ்: தாரா சுதாரியாவை சீண்டுகிறாரா?

நிகழ்ச்சியின் போது வீர் பஹாரியாவுக்கு என்ன டேட்டிங் ஆலோசனை வழங்குவீர்கள் என்று கரண் ஜோஹர் கேட்டார்.
Janhvi-Veer Pahariya
Published on: 
Summary

கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஏபி தில்லானின் இசை கச்சேரியில் தாரா சுதாரியா கலந்துகொண்டார். அப்போது மேடையில் பாடகர் தாராவுக்கு கன்னத்தில் முத்தமிட்டதும், அதைக் கண்ட பார்வையாளர் பகுதியில் இருந்த வீர் பஹாரியாவின் முக பாவனைகளும் இணையத்தில் வைரலாகின.

பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் 'காஃபி வித் கரண்' சீசன் 9 நிகழ்ச்சியில் நடிகர் வருண் தவானுடன் விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியின் ராபிட் ஃபயர் சுற்றின் போது தொகுப்பாளர் கரண் ஜோஹர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நிகழ்ச்சியின் போது வீர் பஹாரியாவுக்கு என்ன டேட்டிங் ஆலோசனை வழங்குவீர்கள் என்று கரண் ஜோஹர் கேட்டார். அதற்கு சற்றும் யோசிக்காமல், "அவங்களை எப்போதுமே ஒரு இசை கச்சேரிக்கு அழைத்துச் செல்லாதீர்கள்" என்று ஜான்வி கபூர் பதிலளித்தார். இந்த பதில் வீர் பஹாரியாவின் முன்னாள் காதலியான தாரா சுதாரியாவைத்தான் மறைமுகமாக குறிக்கிறது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கத் தொடங்கினர்.

கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஏபி தில்லானின் இசை கச்சேரியில் தாரா சுதாரியா கலந்துகொண்டார். அப்போது மேடையில் பாடகர் தாராவுக்கு கன்னத்தில் முத்தமிட்டதும், அதைக் கண்ட பார்வையாளர் பகுதியில் இருந்த வீர் பஹாரியாவின் முக பாவனைகளும் இணையத்தில் வைரலாகின. இந்தச் சம்பவம் அந்த ஜோடியின் பிரிவுக்குக் காரணமாகச் சொல்லப்பட்ட நிலையில், ஜான்வியின் இந்த சமீபத்திய கருத்து அந்த சர்ச்சையை மீண்டும் மக்களிடையே பேசும் பொருளாக மாயுள்ளது.

ஜான்வி கபூரின் இந்த கருத்து நகைச்சுவையாக இருப்பதாக ஒரு தரப்பினர் கூறினாலும், மற்றொரு தரப்பினர் பொதுவெளியில் மற்றொரு நடிகையை இப்படி மறைமுகமாக தாக்குவது சரியல்ல என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தாரா சுதாரியா ஏற்கனவே இது போன்ற வதந்திகளை எதிர்கொண்ட நிலையில், தற்போது சக நடிகையே இதைக் குறிப்பிடுவது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

X