

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘ஜெயிலர் 2’ திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது.
அக்.15ம் தேதி வெளியான இப்படம், 2 நாட்களிலேயே ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து, இயக்குநர் நெல்சன் மற்றும் அனிருத் வாழ்த்துப் பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நெல்சன்.,
“திரையரங்குகள் அதிர்கின்றன! தலைவரின் மேஜிக்கே தனி! ஜெயிலர் 2 படத்திற்கு நீங்கள் அளித்த அபரிமிதமான அன்பிற்கும், வரவேற்பிற்கும் ரசிகர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி! ரசிகர்கள் படத்தைக் கொண்டாடும் விதத்தைப் பார்ப்பதை விடச் சிறந்த தருணம் வேறெதுவும் இல்லை! உங்கள் அன்புக்கும், ஆதரவிற்கும் அனைவருக்கும் நன்றி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகி உள்ள இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த் டைகர் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், மிர்னா, சிவராஜ்குமார், மோகன்லால், ஜாபர் சாதிக் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர்.
எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ஜாக்கி ஷெராஃப், வித்யா பாலன், விஜய் சேதுபதி, அபேக்ஷா போர்வால், மிதுன் சக்ரவர்த்தி, அன்னா ராஜன், ஹக்கிம் ஷா, பகவதி பெருமாள், மேகனா ராஜ், பூர்ணா மற்றும் ஜதின் சர்னா ஆகியோர் புதிய முகங்களாக இணைந்துள்ளனர்.
மேலும், இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.