இன்று மாலை வெளியாகிறது 'ஜெயிலர் 2' படத்தின் புது அப்டேட்

‘ஜெயிலர் 2’ படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 10 அல்லது 11-ஆம் தேதிகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இன்று மாலை வெளியாகிறது 'ஜெயிலர் 2' படத்தின் புது அப்டேட்
Published on

இயக்குநர் நெல்சன்- நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர்2’. சென்னை, கேரளா, கோவா மற்றும் மைசூர் போன்ற இடங்களில் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது.

‘ஜெயிலர்’ முதல் பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்திலும் நடிப்பதாக கூறினாலும், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மோகன் லால் மற்றும் சிவராஜ்குமார் தவிர்த்து எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட புது நடிகர்களும் நடித்து உள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதனிடையே, ‘ஜெயிலர் 2’ படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 10 அல்லது 11-ஆம் தேதிகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அது படத்தின் வெளியீடடு தேதியா? முதல் பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பா? படத்தின் மொத்த பணிகளும் முடிந்துவிட்டது என்பது தொடர்பான அறிவிப்பா என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com