அஜித் படத்தில் ஷாலினி நடிக்கிறாரா?

2001-ம் ஆண்டு வெளியான 'பிரியாத வரம் வேண்டும்' படம் தான் ஷாலினியின் கடைசி படமாகும்.
அஜித்- ஷாலினி
அஜித்- ஷாலினி
Published on
Summary

புதிய படத்தில் ஷாலினியை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க ஆதிக் ரவிச்சந்திரன் முயற்சி செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், 'குட் பேட் அக்லி' படத்தை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'டேர் டெவில்' படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அஜித்குமாரின் மனைவி ஷாலினி தயாரிக்கிறார்.

தற்போது கார் பந்தயத்தில் பிசியாக இருக்கும் அஜித்குமார், விரைவில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவிருக்கிறது.

இந்த புதிய படத்தில் ஷாலினியை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க ஆதிக் ரவிச்சந்திரன் முயற்சி செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனாலும் ஷாலினி நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக சொல்லி மறுத்துவிட்டாராம்.

அஜித்குமாரை திருமணம் செய்த பிறகு ஷாலினி படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். 2001-ம் ஆண்டு வெளியான 'பிரியாத வரம் வேண்டும்' படம் தான் ஷாலினியின் கடைசி படமாகும். அந்தப் படத்தில் அவர் பிரசாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com