சன்னி லியோன்கிட்ட பேசறதுக்காவது இந்தி கத்துக்கணும் - இயக்குநர் பேரரசு

பிரபுதேவா நடித்திருக்கும் பேட்ட ராப் படத்தில் நாயகியாக வேதிகா நடித்துள்ளார்.பக்கத்துல சன்னி லியோன் உக்காந்துருக்காங்க, 2 வார்த்தை இந்தி-ல பேச முடியல
perarasu - sunny leone
Published on

எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதிய திரைப்படம் தான் பேட்ட ராப். படத்தில் நாயகியாக வேதிகா நடித்துள்ளார்.

புளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் இத்திரைப்படத்திற்கு டி இமான் இசை அமைத்துள்ளார். விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இத்திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், இயக்குனர் பேரரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய பேரரசு, "2,3 வருஷத்துக்கு முன்னாடி "இந்தி தெரியாது போடா"-னு சொல்லுவாங்க, கேட்கும்போது சந்தோஷமா இருந்தது. நிறைய பேர் "இந்தி தெரியாது போடா" அப்படினு டி-சர்ட் போட்டாங்க அதை பார்க்கும்போதும் சந்தோஷமா இருந்தது. இப்போதான் இந்தி தெரியாதது கவலையா போச்சு, பக்கத்துல சன்னி லியோன் உக்காந்துருக்காங்க, 2 வார்த்தை இந்தி-ல பேச முடியல. இதுக்காகவே இந்தி கத்துக்கணும்" என்று கிண்டலாக பேசினார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com