விக்ரம் பிரபுவின் ‘சிட்டி ஆஃப் கோல்டு’ படப்பிடிப்பு நிறைவு!

படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளது.
விக்ரம் பிரபுவின் ‘சிட்டி ஆஃப் கோல்டு’ படப்பிடிப்பு நிறைவு!
Published on: 

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் ‘சிட்டி ஆஃப் கோல்டு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

அறிமுக இயக்குநர் சித்தார்த் எழுத்து இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

‘சிட்டி ஆஃப் கோல்டு’ தங்கக் கடத்தலை மையமாக கொண்ட ஆக்ஷன், த்ரில்லர் படமாகும். இதில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து இன்ஸ்டா பிரபலம் அமலா சாஜி, நடிகை சிவத்மிகா ராஜசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், அடுத்தாண்டு திரையரங்குளில் வெளியாக உள்ளது.

X