‘விஜய் செய்ததை நீங்களும் செய்யாதீர்கள்’ - தனுஷுக்கு சாய்பல்லவி கோரிக்கை!

ஜனநாயகனுக்கு பிறகு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.
‘விஜய் செய்ததை நீங்களும் செய்யாதீர்கள்’ - தனுஷுக்கு சாய்பல்லவி கோரிக்கை!
Published on: 

கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருந்த விஜய், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக உள்ளார்.

2024-ம் ஆண்டு அரசியலில் அடியெடுத்து வைத்த அவர், தான் கையெழுத்திட்ட படங்களை முடித்துவிட்டு, முழு மக்கள் பணியில் ஈடுபடுவேன் என தெரிவித்திருந்தார்.

அதுபோல ஜனநாயகனுக்கு பிறகு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.

இந்நிலையில் நடிகர் தனுஷும் இதுபோல செய்யக்கூடாது என நடிகை சாய்பல்லவி கோரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் தனுஷ் அரசியலில் இறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும்நிலையில், அப்படி ஒரு முடிவெடுத்தாலும், சினிமாவை கைவிடாதீர்கள் என சாய்பல்லவி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஓம் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சியில் இதுதொடர்பாக பேசிய நடிகை சாய்பல்லவி.,

“நீங்கள் என்ன செய்தாலும், உங்களுக்கு நல்லதே நடக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். இப்போது விஜய் சார் அரசியல் சென்றுவிட்டதால், நடிப்பதில்லை. ஆனால் நீங்கள் தொடர்ந்து நடிப்பீர்கள் என நம்புகிறேன்.

நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும், தொடர்ந்து நடிக்கவேண்டும். உங்களை நாங்கள் மிஸ் செய்வோம்.” என தெரிவித்தார்.

X