

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டோனியை நடிகர் தனுஷ் புகழ்ந்து, அவரது விளையாட்டு திறமையும், இளைஞர்களுக்கு அளித்த ஊக்கமும் வருங்கால தலைமுறையையும் உற்சாகப்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த டோனி 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டாலும், ஐ.பி.எல்-ல் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வந்தார். இருப்பினும் 2024-ம் ஆண்டு சீசனுக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய டோனி, கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்துவிட்டு ஒரு வீரராக நீடித்தார்.
இந்த நிலையில் தான், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக டோனி அறிவித்துள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வு பெற்றது குறித்த நடிகர் தனுஷ் சமூக வலைதளத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சில விளையாட்டு வீரர்கள் நம்மை மகிழ்விக்கிறார்கள், இன்னும் சிலர் நம் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிடுகிறார்கள். எம்.எஸ். தோனி இந்த இரண்டு வகையிலும் அடங்குபவர். அனைத்து நினைவுகளுக்கும் நன்றி. நீங்கள் இல்லாமல் இந்த விளையாட்டு இனி ஒருபோதும் முன்போல் இருக்காது, இருப்பினும், களத்திற்கு வெளியே உங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.
உங்கள் அறிவுரைகளாலும் அனுபவ அறிவாலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். இது வரும் தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளித்து, அவர்களை உற்சாகப்படுத்தும் என்று நம்புகிறேன். Farewell சாம்பியன்! என்று கூறியுள்ளார்.