'சிக்கிடு' Vibe-ல் ரசிகர்கள்... இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் கூலி படத்தின் First Single

கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது. ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் மற்றும் "சிக்கிடு" வைப் பாடலின் ப்ரோமோ வீடியோ வைரலானது.
'சிக்கிடு' Vibe-ல் ரசிகர்கள்... இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் கூலி படத்தின் First Single
Published on: 

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.

படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் மற்றும் "சிக்கிடு" வைப் பாடலின் ப்ரோமோ வீடியோ என அனைத்தும் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான சிக்கிடு பாடலின் மியூசிக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் வீடியோக்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.

வகையில் பொதுமக்கள் பலரும் கூலி என குறிக்கும் பேட்சை கையில் அணிந்தபடி இருக்கும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இத்தகைய ப்ரோமோஷன் வீடியோக்கள் சிக்கிடு பாடலின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளன. 

X

Maalai Malar
www.maalaimalar.com