அக்கா மீது செக் மோசடி புகார் - காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகாத நடிகை ராதா!

குடும்ப சொத்துகளை பிரிப்பதில், நடிகைகள் அம்பிகா மற்றும் ராதா இடையே பிரச்னை எழுந்துள்ளது.
செக் மோசடி புகார் - காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகாத நடிகை ராதா!
Published on

நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும், நடிகையுமான ராதா ரூ.46 கோடி காசோலை மோசடி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக புகார்தாரரான ராதாவிடம் முதலில் விரிவான வாக்குமூலம் மற்றும் ஆவணங்களைப் பெறுவதற்காக, செப்டம்பர் 24-ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் விசாரணைக்கு இன்று (செப்.24) நடிகை ராதா நேரில் ஆஜராகவில்லை. தான் பணி நிமித்தமாக தற்பொழுது வெளியூரில் இருப்பதால், நேரில் ஆஜராவதற்கு கூடுதல் கால அவகாசம் கேட்டு ராதா தரப்பில் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பிகாவின் விளக்கம்

இதனிடையே தங்கையின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நடிகை அம்பிகா, குடும்ப சொத்துப் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள நடிகை ராதாவே தங்களுக்கு இந்த காசோலைகளைத் தந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com